Monday 13 November 2017

வணக்கம்.

வரும் டிசம்பர் மாதம் 10ம் தேதி கோவையில் பேலியோ உணவுப்பரிந்துரை நிகழ்ச்சி நடைபெறும். காலை 8 மணி முதல் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், ரத்தப் பரிசோதனை முடிவுகளைப் பார்த்து உணவுப் பரிந்துரை மட்டும் வழங்கப்படும். தெளிவான ரத்தப்பரிசோதனை முடிவுகளை எக்ஸல் ஷீட்களில் நிரப்பிக்கொண்டுவரும் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அவர்கள் விரைவாக உணவுப் பரிந்துரை கிடைக்கவும் அது உதவும். எக்ஸல் ஷீட் நிரப்பாதவர்கள், தெரியாதவர்களுக்கு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் தன்னார்வலர்கள் உதவிசெய்வார்கள்.

நிகழ்ச்சிக்கு வர விரும்பும் மக்கள் கீழே கமென்டில் டோக்கன் பெற்றுக்கொள்ளலாம். தயவுசெய்து நிச்சயமாக வர முடிந்தவர்கள் மட்டும் டோக்கன் பெற்றுக்கொள்ளவும். உங்களின் ரத்தப் பரிசோதனை முடிவுகளை ஒட்டி உங்களுக்கான உணவுப்பரிந்துரை வழங்கப்படும். அடிப்படை சந்தேகங்களுக்கு தன்னார்வலர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலேயே பதில் அளிப்பார்கள்.

இந்த இலவச உணவுப்பரிந்துரை நிகழ்ச்சியில் கோவை சுற்றுவட்டார மக்கள் கலந்துகொண்டு பலனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மற்ற விவரங்களுக்கு இணைப்பில் உள்ள படத்தைப் பார்க்கவும்.

நன்றி.

Image may contain: 1 person, smiling

1 comment:

Popular

Recent

Comments